தமிழ்நாடு

சாதிய ரீதியில் விமர்சனம்: ஹாக்கி வீராங்கனையை நேரில் சந்தித்து வாழ்த்திய மதுரை எம்பி!

Published

on

ஜாதி ரீதியிலான விமர்சனம் செய்யப்பட்ட ஹாக்கி வீராங்கனையை நேரில் சந்தித்து மதுரை எம்பி வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மகளிர் ஹாக்கி அணி மிக அபாரமாக விளையாடியது என்பதும் இருப்பினும் அரையிறுதிப் போட்டியிலும் அதன்பின் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்திய ஹாக்கி அணியில் உள்ள முக்கிய வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டுக்கு சென்ற சிலர் அவரை ஜாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசியனர். பட்டியலினத்தவர் இந்திய ஹாக்கி அணியில் இருப்பதால்தான் இந்தியா மெடல் வாங்க வில்லை என்றும் அவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து ஒரு சிலரை கைது செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜாதி ரீதியாக விமர்சனம் செய்யப்பட்ட வந்தனாவின் வீட்டுக்கு மதுரை எம்பி வெங்கடேசன் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருடைய ஹாட்ரிக் கோல்களை நினைவுகூர்ந்த அவர் நீங்கள் மென்மேலும் ஹாக்கி விளையாட்டில் வளர்ச்சியடைய எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார், இதுகுறித்து மதுரை எம்பி வெங்கடேசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

இன்று வந்தனா கட்டாரியாவைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்தியாவுக்கு தேடித்தந்த பெருமைக்காக நன்றி தெரிவித்தேன். அவருடனான உரையாடல் மிகுந்த மனநிறைவை தந்தது. அவரது வெற்றி தேசத்தின் வெற்றி. இதுதான் வந்தனாவுக்கு நான் சொன்ன சேதி.

வாழ்த்துகள் வந்தனா!
காலம் உங்கள் கைகளில்.

Trending

Exit mobile version