தமிழ்நாடு

மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ஆக ரத்தினவேல் மீண்டும் நியமனம் !

Published

on

மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு என்பவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் டீன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற போது அவர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்றதாக குற்றச்சாட்டு எழும்பியது.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் சமஸ்கிரதத்தில் உறுதிமொழி ஏற்றது சர்ச்சைக்குள்ளான் நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் போர்க்கொடி எழுப்பினார்.

இதனை அடுத்து மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அரசு மருத்துவர்கள் சங்கம் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் அவர்களுக்கு தெரியாமல் நடந்த இந்த விஷயத்தை அவரை பொறுப்பாளியாக கூடாது என்றும் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்பு என்பதும் எங்களுக்கும் உடன்பாடு இல்லை என்றும் எனவே மீண்டும் ரத்தினவேலு அவர்களை பதவியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர் .

இந்த கோரிக்கையை பரிசீலித்து தற்போது மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version