தமிழ்நாடு

படிக்க வைக்காமல் திருமணம் செய்து வைத்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மதுரை இளம்பெண்.. ஜார்க்கண்டில் பட்டதாரியாக மீட்பு

Published

on

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா என்ற இளம்பெண் திருமண வாழ்க்கை பிடிக்காததால் 2017 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது ஜார்க்கண்டில் பட்டாதாரியாக மீட்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் எல்லிஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவரது பெற்றோர் கடந்த 2017 ஆம் ஆண்டு கருமாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமண வாழ்க்கை பிடிக்காததால் திருமணமான சில நாட்களிலேயே தாய் வீட்டிற்கு வந்தடைந்தார். இருப்பினும் திவ்யாவின் பெற்றோர் அவரை கணவருடன் சேர்த்து வைத்தனர்.

இதனால் விரக்தியடைந்த திவ்யா யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் தங்கள் மகள் காணவில்லை என்று போலீசாரிடம் திவ்யாவின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நடத்திய போது திவ்யா ஜார்கெண்டில் இருப்பது தெரியவந்தது. அங்கு தெரிந்த ஒருவரின் செல்போன் மூலம் பேசி கண்டுபிடித்த போலீசார், திவ்யாவிடம் வீடியோ காலில் பேசினர்.

அப்போது, நான் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி பயின்று வருவதாக திவ்யா கூறினார். திவ்யாவின் முகத்தைப் பார்த்த அவரது பெற்றோர் கண்ணீர் விட்டு கதறியழுதனர்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் மகள் கண்டுபிடிக்கப்பட்டதை எண்ணி ஆனந்த கண்ணீர் வடித்தனர். இப்போது திவ்யாவை அவரது பெற்றோருடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version