தமிழ்நாடு

மதுரையில் ரூ.44 கோடி செலவில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம்.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்!

Published

on

தமிழ்நாடு அரசு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் கட்ட ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது.

#image_title

இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் 66 ஏக்கர் நிலப் பரப்பில் அமைய உள்ளது. 7,212 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன.

இந்த அரங்கத்தில் 5000 நபர்கள் அமரக் கூடிய நிரந்தர இருக்கைகள் அமைக்கப்படும், மேலும் 20 ஆயிரம் நபர்கள் அமரக் கூடிய தற்காலிக இருக்கைகள் அமைக்கும் வசதியும் இருக்கும்.

மேலும் இந்த அரங்கத்தில் காளை மாடுகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மாடு பிடி வீரர்களுக்கான வசதிகளும் இருக்கும்.

ஜல்லிக்கட்டு விளையாட்டின் போது அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் விதமாக அங்கேயே அவசரப்பிரிவு மருத்துவமனை வசதிகள் இருக்கும்.

ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைப்பதற்கான இடங்களை கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, அதனைக் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

Madurai Jallikkattu Arena

2023-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. 2024-ம் ஆண்டு முதல் இந்த ஜல்லிக்கட்டு மைதானம் பயன்பாட்டுக்கு வரும்.

seithichurul

Trending

Exit mobile version