தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும்: நீதிமன்றம் கருத்து

Published

on

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமீன் எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆவின் பால் துறையில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் காவல்துறை 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரபாலாஜி தேடி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரிஸ் குமார் என்பவர் தனது வீட்டில் வாரண்ட் இல்லாமல் காவல்துறையினர் சோதனை நடத்தியதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வாரன்ட் இல்லாமல் வழக்கறிஞர் மாரிஸ் குமார் வீட்டில் சோதனை செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.

மேலும் ராஜேந்திரபாலாஜி சரண்டர் ஆக வேண்டும் அல்லது முன் ஜாமீன் பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வர உள்ளதாகவும் அந்த மனுவின் தீர்ப்பின் அடிப்படையில் ராஜேந்திரபாலாஜி வழக்கை சந்திப்பார் என்றும் அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version