தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு: நீதிமன்றம் உத்தரவு

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் முறையை நடைமுறை படுத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது

பள்ளி கல்லூரி மற்றும் தொழில்நுட்ப படிப்பு ஆகிய எல்லாவற்றிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதி கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற கிளை தற்போது மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது

1 முதல் 12ம் வகுப்பு கல்வி மற்றும் பட்டப்படிப்பு என முழுவதும் தமிழ் மொழியில் பயின்றவர்கள் மட்டுமே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தமிழ் வழியில் பயின்றதற்கான 20 சதவீத ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள்

இவ்வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது இந்த உத்தரவை தற்போது நடைமுறைபடுத்த டிஎன்பிஎஸ்சி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் தொலைதூர கல்வியில் ஒரு சில பாடங்களை ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version