தமிழ்நாடு

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க அனுமதி உண்டா? மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Published

on

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடத்தப்படுவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடத்தப்படும். இதற்கு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதும் கள்ளழகரை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மதுரையில் சித்திரைத் திருவிழா நடத்த மதுரை கலெக்டர் தடை விதித்துள்ளார். இதனை அடுத்து மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உள்பட எந்த வைபவமும் நடக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது என்றும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சூழலில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படுத்தலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர், இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version