தமிழ்நாடு

8 போடாமல் டிரைவிங் லைசென்ஸா? மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Published

on

ஓட்டுனர் உரிமை சட்டதிருத்தம் குறித்த வழக்கில் பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு ஆணையிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றால் லைசன்ஸ் பெறலாம் என்றும் ஆர்டிஓ அலுவலகத்தில் 8 போட வேண்டிய அவசியம் இல்லை என்ற சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையை சேர்ந்த ஜான் மார்ட்டின் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்திருக்க வேண்டும் என்ற புதிய முறை உள்ளது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ஜான் மார்ட்டின், நகர பகுதிகளில் இரண்டு ஏக்கர் நிலம் என்பது சாத்தியமில்லை என்றும் 25 கிலோ மீட்டர் தொலைவில்தான் ஓட்டுனர் பயிற்சி மையத்தை அமைக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

ஓட்டுநர் பள்ளி அங்கீகாரம் பற்றிய மத்திய மோட்டார் வாகன விதிமுறை திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள 1650 ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நடத்துவோர் பணிபுரிவோர் இந்த சட்டதிருத்தத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் என்ன பதில் அளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version