தமிழ்நாடு

லாவண்யா வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவு: நீதிபதி மேற்கோள் காட்டிய இரண்டு திரைப்படங்கள்!

Published

on

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சற்றுமுன் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில் இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி இரண்டு திரைப்படங்களை மேற்கோள் காட்டி உள்ளார் என்றும் அதில் ஒன்று தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்பில் நவாசுதீன் சித்திக் நடித்த ’சீரியஸ் மேன்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஐயன் மணி என்பவரின் மகன் மிகுந்த புத்திசாலியாக இருப்பதற்கு ஜீசஸ் தான் காரணம் என்றும், ஜீசஸ் அருள் கிடைத்து உள்ளதே அவனுக்கு பெருமை என்றும் கூறுகிறார்.

அதற்கு ஐயன் மணி எங்களது கடவுள் மீனாட்சி என்றும் நாங்கள் மீனாட்சியையும் விநாயகரையும் கும்பிடுகிறோம் என்றும் எங்களது கடவுள் அருளால் தான் தனது மகனுக்கு புத்திசாலித்தனம் கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்.

இதனை அடுத்து பள்ளி தாளாளர் உங்கள் மகனை ஜீசஸ் அருள்புரிகிறார் என்றும் நீங்கள் விரும்பினால் உங்கள் மகனுடன் நீங்களும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி கொள்ளலாம் என்றும் அவ்வாறு மாறினால் உங்கள் மகனுக்கு ஸ்காலர்ஷிப் உள்பட அனைத்தும் கிடைக்கும் என்றும் இது குறித்து ஏற்கனவே மதம் மாறியவர்களுடன் நீங்கள் கேட்டு பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இது கட்டாயம் இல்லை என்றும் உங்களது நலனுக்காகத்தான் கூறுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மதம் மாறினால் உங்கள் மகனுக்கு இலவச புத்தகங்களும் இலவச வாகன வசதியும் கிடைக்கும் என்றும் அவர் மூளைச்சலவை செய்யும் காட்சியை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் கே பாலச்சந்தர் இயக்கிய ’கல்யாண அகதிகள்’ என்ற திரைப்படத்தில் நாயகி ஒரு கிறிஸ்தவரை காதலிக்கிறார். அவரது திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளும் காதலனின் பெற்றோர்கள் மதம் மாறினால் மட்டுமே திருமணத்திற்கு சம்பாதிப்போம் என்றும் மதம் மாறினால் எந்தவிதமான வரதட்சணையும் தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.

அப்போது நாயகி எந்தவிதமான வரதட்சணையும் வேண்டாம் என்று கூறும் நீங்கள் மதம் மாற கேட்பதும் ஒருவித வரதட்சணை தானே என்று கூறும் வசனம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு திரைப்படங்களின் வசனத்தை மேற்கோள் காட்டி நீதிபதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version