சினிமா செய்திகள்

‘இரண்டாம் குத்து’ படக்குழுவினருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Published

on

இருட்டு அறையில் முரட்டுக் குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இரண்டாம் குத்து.

இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இரண்டாம் குத்து திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தடை செய்ய வேண்டும், டீசரை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அண்மையில் வெளியான இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசர் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச வசனங்களுடனும் இடம்பெற்றுள்ளது. இது யூடியுபில் வெளியான சில மணி நேரங்களில் லட்சம் கணக்கான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

கோவிட்-19 காலம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணையதளம் மூலம் படங்களைப் படிப்பது போன்றவை அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் இது போன்ற ஆபாச கருத்துக்கள் கொண்ட டீசர் போன்றவை வெளியானால் அது மாணவர்களின் கவனத்தைத் திசை திருப்பும்.

எனவே இரண்டாம் குத்து படத்தின் டீசர், போஸ்டர் உள்ளிட்டவற்றை இணையதளங்களில் இருந்த் நீக்க வேண்டும், திரை அரங்குகளில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கிருபாகரன், புகழேந்தி உள்ளிட்ட நீதிபதிகள், ‘முன்பெல்லாம் திரைப்படங்கள் பாசமலர் போன்று குடும்ப உறுவர்களைப் பற்றிக் கூறுவதாக இருந்தது. இப்போது படத்தில் இரட்டை வசனங்கள், ஆபாசம் போன்றவற்றைக் கொண்டு வந்து விளம்பரத்தைத் தேடுகின்றனர். இவற்றுக்குத் தனிக்கை குழு அனுமதி அளிப்பது எப்படி என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இணையதளத்தில் இரண்டு என்று இணையதளத்தில் தேடினால் இப்படத்தின் டீசர் வருகிறது. இது மாணவர்களின் கவனத்தினை திசை திருப்பும் விதமாக உள்ளது. இதனால் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து கூகுள், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் படக்குழுவினருக்கும் விளக்க நேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Trending

Exit mobile version