தமிழ்நாடு

இளைஞரணி செயலாளர் ரூ.5லட்சம், வட்ட செயலாளர் ரூ.2.5 லட்சம்: ஏலம் விடப்படுகிறதா திமுக பதவிகள்?

Published

on

இளைஞரணி பொறுப்பாளர் பதவி ரூ.5 லட்சம், வட்டச் செயலாளர் பதவி ரூ.2.5 லட்சம் என திமுகவின் பதவிகள் ஏலம் விடப்படுவதாக மதுரை நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்திலேயே மதுரையில்தான் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர்கள் ஒட்டப்படும் என்றும் அரசியல் போஸ்டராக இருந்தாலும் சரி, சினிமா போஸ்டர் ஆக இருந்தாலும் சரி மதுரையில் இருந்து தான் போஸ்டர் கலாச்சாரமே ஆரம்பம் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதுரையில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் அவர்கள் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வரும் நிலையில் அவரது செயல்பாடுகளை விமர்சனம் செய்யும் வகையில் திமுகவினர் நகர் முழுவதும் சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த போஸ்டரில் ’மதுரை மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பு 5 லட்சம், பகுதி செயலாளர் பொறுப்பு 3 லட்சம், மாவட்ட பிரதிநிதி பொறுப்பு 3 லட்சம், வட்ட செயலாளர் பொறுப்பு இரண்டரை லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திமுகவில் பதவி வேண்டும் என்றால் குண்டாஸ் ஆக இருக்கவேண்டும் என்றும் உழைத்தவனுக்கு ஒன்றும் கிடைக்காது என்றும் பணம் இருந்தால் பதவி கண்டிப்பாக கிடைக்கும் என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த போஸ்டர் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு செல்லுமா? தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version