தமிழ்நாடு

மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுமா? மதுரை கலெக்டர் தகவல்!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சித்திரை திருவிழா இந்த ஆண்டும் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்காமல் உள்விழாவாக சித்திரை திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டாவது மதுரை சித்திரை திருவிழா நடைபெறும் என்று மதுரை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதை அடுத்து மதுரை கலெக்டர் இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மதுரை சித்திரை திருவிழா கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் உள்திருவிழாவாக நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சித்திரைத் திருவிழாவின் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கோவில் வளாகத்தின் உள்ளேயே நடைபெறும் என்ற அறிவிப்பு பக்தர்களுக்கும் மதுரை மக்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் திருவிழா போன்ற மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் என்பதால் மதுரை கலெக்டர் எடுத்த முடிவு சரியானது என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version