தமிழ்நாடு

சென்னை, மதுரை, ராமேஸ்வரம் சிறப்பு ரயில்கள் நேரமாற்றம்: முழு விபரங்கள்!

Published

on

சென்னை, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ஒருசில சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தென்னிந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில்: வண்டி எண் 06655 என்ற சிறப்பு ரயில் நவம்பர் 4 முதல் மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையை இரவு 07.30, 07.42, 07.55, 08.10, 08.25, 08.47, 09.02, 09.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 07.15, 07.25, 07.40, 07.56, 08.10, 08.32, 08.52, 09.10 மணிக்கு புறப்படும்.

புனலூர் – மதுரை சிறப்பு ரயில்: வண்டி எண் 06730 என்ற சிறப்பு ரயில் நவம்பர் 1 முதல் விருதுநகரிலிருந்து அதிகாலை 03.15 மணிக்கு பதிலாக அதிகாலை 03.00 மணிக்கு புறப்படும்.

சென்னை – கொல்லம் சிறப்பு ரயில்: வண்டி எண் 06101 என்ற சிறப்பு ரயில் நவம்பர் 1 முதல் திண்டுக்கல், மதுரை ஆகிய நிலையங்களில் இருந்து முறையே நள்ளிரவு 11.40, 12.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நள்ளிரவு 11.05, 12.15 மணிக்கு புறப்படும். அதேபோல் மறுமார்க்கத்தில் வண்டி எண் 06102 கொல்லம் – சென்னை சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 08.10 மணிக்கு பதிலாக இரவு 08.05 மணிக்கு புறப்படும்.

புவனேஸ்வர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில்: வண்டி எண் 08496 என்ற சிறப்பு ரயில் நவம்பர் 4 முதல் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ரயில் நிலையங்களிலிருந்து முறையே மாலை 04.25, 05.15, 06.30, 06.38, இரவு 07.05, 07.45, 08.10, 08.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 04.15, 05.05, 05.55, 06.04, 06.35, இரவு 07.00, 07.25, 07.55 மணிக்கு புறப்படும்.

seithichurul

Trending

Exit mobile version