தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ்: 4 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவனை வடிவமைப்பு டெண்டர் விடப்பட்டது!

Published

on

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிடத்தை வடிவமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் மத்திய சுகாதாரத்துறை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியாவிடம் குறிப்பாணையை சமர்ப்பித்த பின்னர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சந்தித்தார்.

அப்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டச் செலவு முன்பு 1,400 கோடி ரூபாயிலிருந்தது. அது தற்போது 1,900 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றார்.

 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை 2019-ம் ஆண்டு தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்பு சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மட்டுமே கட்டப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவேறி விட்டது. விரைவில் பிரதமர் மோடி அதனை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிடத்தை வடிவமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

2026-ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version