தமிழ்நாடு
மதுரையில் ஒரு சில மணி நேரத்தில் பெய்த 10 செ.மீ மழை – குளம் போல தேங்கிய மழை வெள்ளம்! #Video
![Rain - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/Rain-1.jpg)
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையில் ஒரு சில மணி நேரத்தில் சுமார் 10 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததாக தகவல் வந்துள்ளது.
மதுரையில் பெய்த திடீர் கன மழையைத் தொடர்ந்து அங்கு எடுக்கப்பட்ட வீடியோ இதோ:
Madurai after intense downpour of close to 100 mm.
Credits Praveen pic.twitter.com/cHIDMpd4n4
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) July 1, 2021
அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள மழை எச்சரிக்கை செய்தி வருமாறு:
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருபத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிஙல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
What a day it is turning out for Tamil Nadu with Thunderstorms seen in most districts and in particular very intense ones seen in north TN pic.twitter.com/fLUJOO2928
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) July 1, 2021
நாளை தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.