தமிழ்நாடு

ஜிபிஎஸ் கருவி – போக்குவரத்து துறையின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

Published

on

பொது போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்துத்துறை உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வாகனங்களில் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் அதன் பாகங்களை 140க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அவற்றில் 8 நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளை மட்டுமே பொருந்த வேண்டும் என்று போக்குவரத்து துறை அண்மையில் உத்தரவிட்டடிருந்தது. இதனை எதிர்த்து ஸ்மார்ட் மொபிலிட்டி அசோசியேஷன் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாகனங்களுக்கான கருவிகளைத் தயாரிக்க 144க்கும் மேற்பட்ட  நிறுவனங்கள் உள்ள நிலையில், குறிப்பிட்ட 8 நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளை மட்டும் வாங்க வேண்டும் என்று கூறுவது ஏன்? என கேள்வி எழுப்பியது.

பின்னர், குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்துத்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்,  இது தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் பதிலளிக்க வேண்டுமென ஜனவரி 18 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version