சினிமா செய்திகள்

சூரரைப்போற்று இந்தி ரீமேக் படத்திற்கு தடை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Published

on

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ’சூரரைப்போற்று’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென சூரரைப்போற்று படத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளதாக சற்றுமுன் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூரரை போற்று திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் பாலிவுட் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஷிக்யா என்டர்டைன்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்தன.

இந்த நிலையில் தங்களுடைய அனுமதி பெறாமலேயே 2டி நிறுவனம் இந்தி ரீமேக் செய்ய இருப்பதாகவும், இதனையடுத்து அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஷிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் சூரரைப்போற்று இந்தி ரீமேக் படத்துக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சூரரைப்போற்று உரிமை படத்திற்கு திடீர் தடை ஏற்பட்டுள்ளது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version