தமிழ்நாடு

மதுரையில் மெட்ரோ ரயில்.. எப்போது? எந்த வழித்தடத்தில்?

Published

on

மதுரையில் அடுத்த 4 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளது.

மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் முடிவடைந்து, அறிக்கை மாநில அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கான நிதி ஒதுக்கப்பட்ட உடன் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. சுமார் 8,000 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Madurai Metro Train Routeமதுரையில் அமைக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை என 31 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட உள்ளது. அதில் கோரிப்பாளையத்திலிருந்து வசந்த நகர் வரை 5 கிலோ மீட்டரும் அடங்கும்.

மொத்தமாக 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் இந்த பாதையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை விமான நிலையம் செல்வது மிகவும் எளிமையாகும்.

மதுரை விமான நிலையம்

இதற்காக 600 ஏக்கர் இடம் கையகம் படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும் மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் 4 ஆண்டுகளில் கட்டுமான பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version