இந்தியா

ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல், டீசல் விலை; பிரதமர் மோடியைப் பாராட்டும் அமைச்சர்!

Published

on

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்த விலை உயர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியுள்ளார் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர்.

நாட்டில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த விலை உயர்விற்கு மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும்பான்மையான விகிதம், மத்திய அரசு விதிக்கும் வரிகளுக்கேச் செல்கிறது. இதனால் அந்த வரி விகிதத்தை மத்திய அரசுக் குறைக்க முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ம.பி. கல்வித் துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங்க், ‘ஒரு விதத்தில் பிரதமர் மோடியைப் பாராட்டியே ஆக வேண்டும். அவர் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சார சக்தியைத் தொடர்ந்து ப்ரொமோட் செய்து வருகிறார். இதன் மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறையும்.

மோடிஜி, மின்சார வாகனங்களை நாட்டில் அதிக அளவு பயன்படுத்த வேண்டும் என்னும் நோக்கில் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் எண்ணெய் விலை மேலும் குறையும்.

சர்வதேச சந்தையில் தேவையை முன் வைத்து தான் எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நம் நாட்டில் தேவையைக் குறைத்தோம் என்றால் எண்ணெய் விலையும் குறையும். அதைத் தான் மோடிஜி செய்து கொண்டிருக்கிறார்’ என்று வினோதமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

 

 

 

 

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version