உலகம்
அட இதென்ன புதுசா இருக்கு.. ம.பி தேர்தலில் பாஜகவிற்கு எதிராக களமிறங்கும் இந்து சாமியார்கள்!
போபால்: மத்திய பிரதேச தேர்தலில் புதிய திருப்பமாக பாஜக கட்சிக்கு எதிராக நிறைய இந்து சாமியார்கள், குருமார்கள் தேர்தலில் களம் குதித்து இருக்கிறார்கள்.
சாஞ்சி வீராசாத் என்ற கட்சி மத்திய பிரதேச தேர்தலில் முக்கிய கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இந்த கட்சி சார்பாக மொத்தம் 50 இந்து சாமியார்கள் தேர்தலில் நிற்கிறார்கள்.
மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சிக்கு பெரிய உதவியாக இருந்த கம்ப்யூட்டர் பாபா எனப்படும் நம்தியோ தாஸ் தியாகி பாஜகவிற்கு எதிராக களமிறங்க உள்ளார். பாஜகவிற்கு ஆதரவு அளித்து வந்த இவர் பாஜகவின் ஆட்சியை வெறுக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளார்.
இவர்கள் மட்டுமில்லாமல் தேவகி நந்தன் தாக்குர், வைஷ்ணவ சாமியார் உள்ளிட்ட நிறைய சாமியார்கள் அங்கு தேர்தலில் நிற்கிறார்கள். குறைந்த பட்சம் 100 சாமியார்களாவது இந்த தேர்தலில் நிற்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பாஜக கட்சிக்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்ய போவதாக கூறியுள்ளனர்.