இந்தியா

கர்நாடகாவை தொடர்ந்து மத்திய பிரதேசம்: 24 மணி நேரத்தில் காங்கிரஸ் அரசை கலைத்துவிடுவோம்!

Published

on

கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இதில் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்ததையடுத்து கடந்த 17 நாட்களாக கர்நாடக அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு கவிழ்ந்தது.

கர்நாடகாவில் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததும், அவர்கள் மும்பையில் தங்க வைக்கப்பட்டு காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க முடியாத வைக்கப்பட்டிருந்ததும், குதிரை பேரம் நடந்ததையும் ஓட்டு மொத்த தேசமும் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. அரசியல் விமர்சகர் மத்தியில் பாஜகவின் இந்த செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுபோன்ற நடவடிக்கை மூலம் மத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் ஆட்சியையும் கலைக்க பாஜக முயற்சித்து வருவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை 24 மணி நேரங்களில் கலைத்துவிடலாம், தலைமையின் சிக்னலுக்காக காத்திருக்கிறோம் என பாஜக தலைவரும், அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான கோபால் பார்கவா கூறியுள்ளார். இது தேசிய அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version