சினிமா செய்திகள்

மாதவனின் ‘மாறா’ பட ரிலீஸ் ஒத்திவைப்பு.. புதிய வெளியீட்டு தேதி இதோ..!

Published

on

மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்லி. இந்தப் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல், தமிழகத்திலும் வெற்றிநடைபோட்டது. இதனையடுத்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை மாறா என்ற பெயரில் திலீப் குமார் என்ற அறிமுக இயக்குநர் உருவாக்கி வருகிறார்.

மாதவன், ஸ்ர்த்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் மாறா படம் டிசம்பர் 17 ஆம் தேதி அமேசானில் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.

பின்னர் கொரோனா பரவல் காரணமாக பட வேலைகள் பாதிக்கப்பட்டன. இதனால் திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளிப்போகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே தற்போது மாறா படத்தின் வெளியீட்டுத் தேதி ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசானின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில், கலக்கலாக உருவாகி வரும் மாறா திரைப்படம் ஜனவரி 8 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தாமரை பாடல் எழுதியுள்ளார், ஸ்டாண்டப் காமெடியன் அலெக்ஸ் திரைக்கதை எழுதியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version