செய்திகள்

குப்பை கொட்டுற லாரி பார்த்திருப்பீங்க!.. லாரியே குப்பையா கொட்டினத பார்த்திருக்கீங்களா!.. (வீடியோ)..

Published

on

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாக மாறுவது வழக்கமான ஒன்று. இறுக்கமான வாழ்வில் சில வீடியோக்கள் மனதுக்கு நெகிழ்ச்சியாகவும், சில வீடியோக்கள் சிரிப்பவை வரவழைப்பதாகவும், சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதும் உண்டு..

இந்நிலையில், சிரிப்பை வரழைப்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருவர் சரக்கு ஏற்றிய லாரியை ஓட்டி வருகிறார். ஒரு திருப்பத்தில் லாரி பாதியாக உடைந்து ஒருபக்கம் சாய்ந்து கீழே விழுகிறது. ஓட்டுனரும் கீழே குதித்து விட்டார். ஆனால், கீழ் பகுதி பாதி யாருமில்லாமல் வேகமாக ஓடுகிறது.,

இந்த வீடியோவை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘பிரிந்து போவதால் ஏற்படும் வலி.. உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனையை எப்படி தூக்கி எறிந்துவிட்டு நீங்கள் செல்ல வேண்டும் என்பதை இந்த வீடியோ காட்டுகிறது’ என நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நெட்டிசன்கள் சிலர் இந்த வீடியோவை பகிர்ந்து ‘குப்பை கொட்டுற லாரியை பார்த்திருப்பீங்க.. லாரியே குப்பையா கொட்டினத பார்த்திருக்கீங்களா.. இப்போ பாருங்க’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version