சினிமா செய்திகள்

மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ கெட்டை என்ற திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசாக வேண்டிய நிலையில் இந்தப் படம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்த வீடியோவை மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி உள்ளது என்பதும் இந்த படத்தில் மாதவன் ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Trending

Exit mobile version