தமிழ்நாடு

அண்ணாமலை வீடியோவும் என்னிடம் உள்ளது: யூடியூபர் மதன் புதிய வீடியோ

Published

on

அண்ணாமலையின் வீடியோ ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யூடியூபர் மதன் பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கேடி ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதன் ரவிச்சந்திரன் சர்ச்சைக்குரிய கே டி ராகவன் வீடியோவை திடீரென டெலிட் செய்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது மதன் ரவிச்சந்திரன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பல பெண்களின் பெரிய பிரச்சனைகளுக்கு அண்ணாமலை காரணமாக இருக்கப் போகிறார் என்றும் கேடி ராகவன் வீடியோவை வெளியிட சொன்னதை அண்ணாமலை தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அண்ணாமலை தான் அந்த வீடியோவை வெளியிட சொன்னார் என்பதற்கான ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றும் இதை அவர் மறுத்தால் அவருடைய வீடியோ வெளியிடப்படும் என்றும் மதன் கூறியுள்ளார்.

மதனின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாஜகவில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வியை பொது மக்கள் மனதில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version