தமிழ்நாடு

பயந்துட்டியா குமாரு: கே.டி.ராகவன் வீடியோவை டெலிட் செய்த மதன்!

Published

on

தமிழக பாஜக பொதுச் செயலாளர் கேடி ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று நேற்று பத்திரிகையாளர் மதன் அவர்களின் யூடியூப் சேனலில் வெளியானது. இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கேடி ராகவன் தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் நீண்ட விளக்கம் கொடுத்து ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் யூடியூப் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகிய இருவரும் தமிழக பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். கேடி ராகவன் தொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் மதன் நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இது பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கைத் குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

அதே நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்து தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்கப்படுகின்றனர். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறது என குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய கேடி ராகவன் வீடியோவை மதன் திடீரென நீக்கியுள்ளார். இந்த வீடியோவை நீக்க மாட்டேன் என்றும், எந்த பிரச்சினை வந்தாலும் சந்திப்பேன் என்று தைரியமாக இந்த வீடியோவில் மதன் கூறிய நிலையில் திடீரென அவர் இந்த வீடியோவை நீக்கி இருப்பதை பார்த்து ’பயந்துட்டியா குமாரு’ என்று நெட்டிசன்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version