சினிமா

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தனுஷின் புதிய படம் – ரசிகர்கள் அதிர்ச்சி

Published

on

தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நடிகராக தனுஷ் இருக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒருபக்கம் மாறன் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

தனுஷ் நடிக்கும் அவரின் 43வது திரைப்படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஆனால், தியேட்டரில் அல்ல ஓடிடியில் என்பதுதான் புதிய செய்தி ஆகும். ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகிறது. எனவே, பொங்கல் விடுமுறையில் விஜய் தொலைக்காட்சியில் இப்படம் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை..

இந்த செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version