சினிமா செய்திகள்

தீபாவளி ரேஸில் குதித்த ‘மாநாடு’: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

வரும் தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ மற்றும் தல அஜித்தின் ’வலிமை’ ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் சிம்புவின் ’மாநாடு’ திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபாவளி தினத்தில் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நிறைவான மகிழ்வில் ’மாநாடு’ படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம். படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இத்தனை நாட்கள் பேரன்பு கொண்ட அனைவருக்கும் நன்றிகள் உங்கள் ஆதரவோடு வருகிறோம், வெல்வோம்’ என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

எனவே வரும் தீபாவளி ரேஸில் ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமையோடு சிம்புவின் ’மாநாடு’ படமும் கலந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version