சினிமா செய்திகள்

‘மாநாடு’ மோஷன் போஸ்டர்… சிம்பு ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

Published

on

எஸ்.டி.ஆர் என்னும் சிம்பு என்னும் சிலம்பரசனுக்கு வெறித்தனமான ரசிகர்கள் அதிகம். கொரோனா காலக்கட்டத்தில் உடம்பை ஸ்லிம்மாக குறைத்த சிம்பு, ஒரே மாதத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தை நடித்து முடித்துக் கொடுத்தார். பொங்கலுக்கு ஈஸ்வரன் வெளிவரும் என்னும் நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

இந்நிலையில் தற்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் ‘மாநாடு’ என்னும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்தப் படமும் இந்த ஆண்டு நடுவாக்கில் வெளி வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘மாநாடு’ படப்பிடிப்பில் பல பிரச்சனைகள் எழுந்து, தற்போது தான் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் வரும் ஐனவரி 14 ஆம் தேதி, மாலை 4:05 மணிக்கு மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வெகுநாட்களுக்குப் பின்னர் சிம்பு – யுவன் கூட்டணி இணைவதால், படத்தின் பாடல்களும் அந்தர் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபுவுக்கு கடந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாத நிலையில், இப்படம் கை கொடுக்கும் என்று அவரும் நம்புகிறார்.

seithichurul

Trending

Exit mobile version