சினிமா

மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு… இதோ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ…

Published

on

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இது அரசியல் பின்னணியில் உருவான திரைப்படமாகும். இப்படம் கடந்த வருடமே துவங்கப்பட்டது. ஆனால், கொரொனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடை பட்டது.

அதன்பின் ஒரு வழியாக படப்பிடிப்பு துவங்கி சில நாட்கள் நடைபெற்றது. சிம்புவம் படப்பிடிப்பில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். அதன்பின் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பிற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விமான தளத்தில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version