தமிழ்நாடு

பாஜகவின் நீட் வழக்கு: ‘தமிழக மக்களின் மீதான அக்கறையைக் காட்டுகிறது’- தமிழக அமைச்சர் கிண்டல்

Published

on

தமிழ்நாட்டில் நீட் தேர்வு குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் சில வாரங்களுக்கு முன்னர் குழு அமைத்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

அந்தக் குழு இதுவரை பல்வேறு தரப்பு மக்களிடம் கருத்துகளைக் கேட்டு, ஆராய்ந்து இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்நாடு அரசிடம் நீட் தேர்வு குறித்தான ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இந்நிலைநில் இந்தக் குழு அமைத்ததற்கான அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.

இப்படி வழக்குத் தொடர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘மொத்த தமிழ்நாடும் நீட் தேர்வு வேண்டாம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறது. கிரமப்புற மாணவர்கள் மட்டுமல்ல, நகர்ப்புற மாணவர்களும் கூட நீட் தேர்வு என்கிற முறை வேண்டாம் என்றும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவத் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்று ஒருமித்தக் குரலில் வலியுறுத்தி வருகிறார்கள்.

மொத்த தமிழ்நாடும் ஒரு பக்கம் இருந்தால், பாஜக இன்னொரு பக்கத்தில் இருக்கிறது. இப்படி தமிழ்நாட்டின் எண்ணத்துக்கு எதிராக செயல்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீது பாஜகவுக்கு இருக்கும் அக்கறையைப் புரிந்து கொள்ள முடிகிறது’ என்று சூசகமாக கிண்டல் செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version