தமிழ்நாடு

சுகாதாரத்துறைக்கு செம செலக்சன்: கொரோனா நடவடிக்கை முடுக்கிவிடப்படுமா?

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் சுகாதாரத் துறை அமைச்சகத்தை முடுக்கி விடும் வகையில் முன்னாள் மேயர் சுப்ரமணியம் அவர்களை சுகாதாரத்துறை அமைச்சராக முக ஸ்டாலின் தேர்வு செய்துள்ளர. ம சுப்பிரமணி அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்தபோது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பதும், அதன் காரணமாக சென்னை மாநகரம் மிகப் பெரிய அளவில் முன்னேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நெருக்கடியான நிலையில் இருக்கும் சூழ்நிலையில் நல்ல அனுபவமுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் தேவை என்று அனைவரும் அனைவரின் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் மா சுப்பிரமணியன் அவர்கள் தற்போது சுகாதாரத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதால் அவர், சுகாதாரத் துறையை சரியாக கையாள்வார்கள் என்றும் கொரோனா பாதிப்புக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் அதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அன்பில் பொய்யாமொழி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். முதல்முதலாக ஒரு இளைஞர் இந்த துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிக் கல்வித்துறையும் நல்ல முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version