சினிமா செய்திகள்
சொல்ல வேண்டாம்ன்னு நினைச்சேன், ஆனா முடியலை: ‘கர்ணன்’ டீசர் குறித்து பாடலாசிரியர்
![karnan release - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/karnan-release.jpg)
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்திற்கு நேற்று தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த திரைப்படமான ‘கர்ணன்’ திரைப்படத்தின் டீசர் இன்று இரவு வெளியாக உள்ளது. இன்று இரவு 7.01 மணிக்கு வெளியாக இருக்கும் இந்த டீசருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த டீசரை ஏற்கனவே பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனுஷ் நடித்த ’திருடா திருடி’ உள்ளிட்ட ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் சுப்பிரமணியம் சிவா ’அசுரன் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கர்ணன் டீசர் மிக மிக அபாரமாக இருப்பதாகவும் நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்றும் தனுசுக்கு மீண்டும் ஒரு தேசிய விருது கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அதேபோல் பாடலாசிரியர் விவேகா இந்த டீசர் கொடுத்து கூறியபோது ’சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன், ஆனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. வெறித்தனமான டீசர் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த டீசருக்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு எகிறிள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சொல்ல வேண்டாம்னு நெனச்சேன். சொல்லாம இருக்க முடியல. வெறித்த்த்த்தனமான டீசர் ????????
நாளை முதல் ???? https://t.co/bYq0y8o3v5
— Vivek (@Lyricist_Vivek) March 22, 2021