சினிமா செய்திகள்

கவியரசர் வைரமுத்து பிறந்த நாள்: திரையுலகினர் வாழ்த்து!

Published

on

தமிழ் திரைப்படப் பாடலாசிரியரான வைரமுத்து இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்

கடந்த 1953ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் என்ற ஊரில் ராமசாமி – அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் வைரமுத்து. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்த அவர், கல்லூரியில் படிக்கும்போதே பொன்மணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என்ற 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 1980ஆம் ஆண்டு ’நிழல்கள்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’இது ஒரு பொன்மாலை பொழுது’ என்ற பாடலை முதன்முதலாக திரைப்படத்திற்காக இயற்றினார் என்பதும் அதன் பிறகு அவர் சுமார் 6 ஆயிரம் பாடல்களை இதுவரை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இசைஞானி இளையராஜா மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் ஆகியோருடன் இணைந்து பல புகழ் பெற்ற பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி கவிதை தொகுப்புகள், இதுவரை நான் என்ற தனது வரலாறு, கட்டுரைகள், புதினங்கள், ஒலிநாடாக்கள் உள்பட பல புகழ்பெற்ற நூல்களை அவர் எழுதியுள்ளார் என்பதும், அவரை வாசகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் கலைமாமணி விருது, சாகித்ய அகாடமி விருது, பத்மபூஷண் விருது, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது, சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கவியரசு வைரமுத்து அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கள்ளிக்காடு
பொட்டல் வெளி
வயிறு நிரம்பிய
வைகை அணை
கத்திரி வெயில்
கரட்டு மேட்டு
கனமழை
தெற்கத்தி மொழியின்
பெருமைமிகு அடையாளம்
கவித்துவ பாடல்களின்
தனித்துவ தமிழ்
ஏழு தேசிய விருதுகள்
பெற்ற பத்மஸ்ரீ
கவிப்பேரரசு
@Vairamuthu
அவர்களுக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Trending

Exit mobile version