சினிமா செய்திகள்

கவிஞர், பாடலாசிரியர் பிரான்சிஸ் கிருபா காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

Published

on

பிரபல கவிஞர் மற்றும் பாடலாசிரியர் பிரான்சிஸ் கிருபா என்பவர் இன்று அதிகாலை காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி என்ற பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் கிருபா பிரபல கவிஞர் மற்றும் பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எழுதிய மல்லிகை கிழமைகள், சம்மனசு காடு, ஏழு வால்நட்சத்திரம், மெசியாவின் காயங்கள் போன்ற படைப்புகள் வாசகர்களால் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிப்படிப்பு மட்டுமே படித்த இவர் தன்னுடைய கவிதைகள் மூலம் மக்களுக்கு அறிமுகமாகி, அதன் பின்னர் புதினம், திரைப்பட பாடலாசிரியர் என புகழ்பெற்றார். சுசீந்திரன் இயக்கிய ’வெண்ணிலா கபடி குழு’ மற்றும் ’அழகர்சாமியின் குதிரை’ ஆகிய திரைப்படங்கள் உள்பட சில திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர் இவர்தான் என்பதும் இந்த படத்திற்காக இவருக்கு ஒருசில விருதுகள் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் எழுதிய கன்னி என்ற புதினத்திற்கு ஆனந்த விகடன் சிறப்பு விருது கிடைத்தது என்பதும் சம்மனசு காடு கவிதை தொகுப்புக்கு சுஜாதா விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சிஸ் கிருபாவின் மறைவையடுத்து அவரது சொந்த ஊரான நெல்லையில் இன்று அவரது இறுதிச்சடங்கு நடக்கும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version