சினிமா

பவன் கல்யாணின் அத்தாரின்டிகி தாரேதி திரைப்படத் தமிழ் உரிமையைப் பெற்ற லைகா..!

Published

on

2.0, இந்தியன் 2, கோலமாவு கொக்கிலா, சிக்கச் சிவந்த வாணம் போன்ற திரைப்படங்களைத் தயாரித்து வரும் லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணின் அத்தாரின்டிகி தாரேதி தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரேமேக் உரிமையினைப் பெற்றுள்ளது.

2013-ம் ஆண்டுப் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அத்ரிந்திகி தாரடி ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படமாகும். இந்தி, கனடா ஆகிய மொழிகளில் இந்தத் திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு வசூல் ரீதியாக வெற்றியும் பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் ரீமேக்கில் விஜய் நடிக்க வாய்ப்புள்ளதாகவும், முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரை லைக்கா புக் செய்துள்ளதாகவும் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் சூரியா 37, வட சென்னை, ஆர்யாவின் பெயரிடப்படாத ஒரு திரைப்படம் போன்றவற்றையும் தயாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version