சினிமா செய்திகள்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’. தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!

Published

on

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் பாலிவுட் பிரபல நடிகையான ஆலியா பட் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இருப்பினும் இந்த படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் இந்த படம் அக்டோபர் 13ஆம் தேதி வெளிவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது இந்த தகவலை லைக்கா நிறுவனம் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அலியாபட், அஜய்தேவ்கான், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவானி இசையமைத்துள்ளார். இந்த படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version