சினிமா

AK 62 update: மகிழ் திருமேனியின் கோரிக்கையை நிராகரித்த லைகா?

Published

on

அஜித் குமாரின் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அனிருத்துக்கு பதிலாக தனக்கு சந்தோஷ் நாராயணன் இருந்தால் நல்லா இருக்கும் என மகிழ் திருமேனி கூறியதாக தகவல்கள் வெளியாகின.

மகிழ் திருமேனி இயக்க சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்கப் போகிறார் என தகவல்கள் பரவலாக கூறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மகிழ் திருமேனியின் கோரிக்கையை லைகா நிறுவனம் நிராகரித்து விட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

#image_title

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த ஏகே 62 படத்திற்கு அனிருத் ஏற்கனவே கமிட் செய்யப்பட்டு அவருக்கான அட்வான்ஸ் தொகையையும் லைகா நிறுவனம் வழங்கி விட்டதாம்.

இயக்குநரை மாற்றியதை போலவே தற்போது இசையமைப்பாளரையும் மாற்றினால் ஏகப்பட்ட சிக்கல் வரும் என்பதால் லைகா நிறுவனம் மகிழ் திருமேனியின் கோரிக்கையை ஏற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

#image_title

மேலும், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு பாடல் கூட ஹிட் அடிக்காத நிலையில், மீண்டும் அஜித் படத்தில் சந்தோஷ் நாராயணனை வைத்து ரிஸ்க் எடுக்க லைகா விரும்பவில்லை என்றும் அனிருத் தான் ஏகே 62 படத்திற்கு இசையமைக்கப் போகிறார் என்றும் உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித்தின் ஏகே 62 படத்திற்கான ஆபிஸ் பூஜையே நேற்று போடப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால், மார்ச் 2வது வாரத்தில் தான் ஏகே 62 படத்தின் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே வரும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version