Connect with us

கிரிக்கெட்

பூரன், ஸ்டோய்னிஸ் அதிரடி ஆட்டம் : 1 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி!

Published

on

16 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். பிறகு களமிறங்கிய பெங்களூரு அணியில், விராட் கோலி மற்றும் கேப்டன் டூ பிளஸ்சிஸ் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தனர்.

பெங்களூர் 212/2

விராட் கோலி 44 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல்லும் அதிரடி காட்டத் தொடங்கினார். மறுமுனையில் டூ பிளஸ்சிஸ் 35 பந்துகளில் அரை சதம் கடந்து, தனது அதிரடியை தொடர்ந்தார். இருவரும் பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சருமாக அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். அவர் 59 ரன்கள் எடுத்திருந்த போது கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளஸ்சிஸ் 79 (46) ரன்களும், தினேஷ் கார்த்திக் 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்களை குவித்தது. லக்னோ அணியில் மார்க் வுட் மற்றும் அமித் மிஸ்ரா ஆகிய இருவரும் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

வாணவேடிக்கை நிகழ்த்திய பூரன்

213 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்கமே அதிர்ச்சியாக கெய்ல் மேயர்ஸ் (0) ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின் களமிறங்கிய தீபக் ஹூடா 9 ரன்னும், குர்ணால் பாண்ட்யா (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி காட்ட 25 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். பிறகு, ஸ்டோய்னிஸ் 65 (30) ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுலும் 18 (19) ரன்களில் ஆட்டமிழந்தார்.

லக்னோ வெற்றி

அடுத்து நிகோலஸ் பூரனுடன், பதோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் வாணவேடிக்கை நிகழ்த்திய பூரன் 15 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். இதனால் பெங்களூரு அணி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைந்தனர். பிறகு, பூரன் 62 (18) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்நிலையில் பதோனி சிக்சர் அடித்து 30 (24) ரன்களில் ஹிட் விக்கெட்டாகி வெளியேற, அடுத்து களமிறங்கிய மார்க் வுட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஒவரில் உனத்கட் 9 (7) ரன்னில் ஆட்டமிழக்க போட்டி பரபரப்பானது. இறுதியில் கடைசி பந்தில் 1 ரன் எடுத்து லக்னோ அணி வெற்றிபெற்று அசத்தியது. முடிவில் லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் வெய்னி பர்னல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட்டுகளும், கரண் சர்மா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!