தமிழ்நாடு

தமிழகத்திலும் குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகம்.. சூப்பர் தகவல்..!

Published

on

டெல்லி உள்பட ஒரு சில மாநிலங்களில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு சப்ளை செய்து வரும் நிலையில் தமிழகத்திலும் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விரைவில் சப்ளை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தமிழக செயல் இயக்குனர் அசோகன் என்பவர் கூறும் போது ’இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தமிழகம் முழுவதும் குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் வழித்தடம் அமைத்து வருகிறது என்றும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்னும் ஒன்றரை வருடங்களில் குழாய்கள் அமைக்கும் பணி முடிந்து வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு சப்ளை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டெல்லி உள்பட வட மாநிலங்களில் குழாய்கள் மூலம் எரிவாயு சப்ளை செய்யப்படுவதால் அம்மாநில மக்களுக்கு மிகவும் வசதியாக இருந்து வரும் வகையில் இந்த திட்டம் விரைவில் தமிழ்நாட்டுக்கும் வரவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு சப்ளை செய்யும் பணி தொடங்கும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குழாய்கள் மூலம் எரிவாயு சமலே சப்ளை செய்யும் திட்டம் அமல்படுத்துவிட்டால் சிலிண்டர் பயன்பாடு தேவையில்லை என்றும் தேவையற்ற பயமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படுவது போன்று எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டு சமையலறைக்கு நேரடியாகவே எரிவாய் குழாய்கள் கொண்டு செல்லப்படும்.

மேலும் எரிவாயு பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி மீட்டர் பொருத்தப்பட்டு அந்த மீட்டர் கணக்கெடுக்கின் படி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சமையல் எரிவாயு பயன்பாட்டை பொருத்து கட்டணம் வசூலிக்கப்படும். சர்வதேச தரத்துடன் கூடிய வடிவமைப்பில் குழாய்கள் தமிழகத்தில் பதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version