வணிகம்

தொடர்ந்து 2வது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. ஜூலை மாத விலை நிலவரம் என்ன?

Published

on

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் தொடர்ந்து 2வது மாதமாக ஜூலையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 610 ரூபாய் 50 பைசாவாக 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் விற்பனையாக உள்ளது.

பிற முக்கிய நகரங்களான டெல்லியில் 594 ரூபாய், கொல்கத்தாவில் 620 ரூபாய் 50 பைசா, மும்பையில் 594 ரூபாய் என 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரம் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை சென்னையில் 1255 ரூபாய், டெல்லியில் 1135 ரூபாய், கொல்கத்தாவில் 1197 ரூபாய், மும்பையில் 1255 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version