வணிகம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு! சென்னையில் தான் அதிம்! எவ்வளவு தெரியுமா?

Published

on

சென்னை: எண்ணெய் நிறுவனங்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலையை 6 ரூபாய் 50 பைசா உயர்த்தி அறிவித்துள்ளன.

அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக எல்பிஜி சிலிண்டர் விலை அதிகபட்சமாக 1,817 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற நகரங்களில் விலை விவரம்:

டெல்லி: ரூ 1,652.50
மும்பை: ரூ 1,605
கொல்கத்தா: ரூ 1,764.50

கடந்த இரண்டு மாதங்களாக வணிக எல்பிஜி சிலிண்டர் விலைகள் குறைந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் மாறுவது வழக்கம்.

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை விவரம்:

டெல்லி: ரூ 803.00
கொல்கத்தா: ரூ 829.00
மும்பை: ரூ 802.50
சென்னை: ரூ 818.50

வீட்டு உபயோக சிலிண்டர் விலைகள் ஒவ்வொரு மாதத்தின் 15-ம் தேதி மாற்றப்பட்டு அறிவிக்கப்படும். ஆகவே, அதுவரை இந்த விலைகள் மாறாமல் இருக்கும்.

Tamilarasu

Trending

Exit mobile version