வணிகம்

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சரிவு!

Published

on

சென்னையில் செப்டம்பர் மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 14,2 கிலோ எடை கொண்ட மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் 610.50 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. இதுவே செப்டம்பர் மாதம் 50 பைசா குறைந்து 610 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

டெல்லி, மும்பையில் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ஆகஸ்ட் மாதத்துடன் எந்த மாற்றமும் இல்லாமல் 594 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொல்கத்தாவில் ஆகஸ்ட் மாதம் 621 ரூபாயாக இருந்து 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 620.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

செப்டம்பர் மாதம் 19 கிலோ வணிக சமையல் எரிவாய் சிலிண்டர் விலை சென்னையில் 1250 ரூபாய் எனவும், டெல்லியில் 1133.50 ரூபாய் எனவும், கொல்கத்தாவில் 1196 ரூபாய் எனவும், மும்பையில் 1089 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version