தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த பகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினார் என்பதும் தெரிந்ததே.

ஒரு சில அசம்பாவித சம்பவங்கள் தவிர தமிழகம் முழுவதும் தேர்தல் மிகவும் அமைதியாக நடந்தது என்பதும் வாக்காளர்கள் மிகவும் பாதுகாப்பாக தங்களது வாக்கை பதிவு செய்தார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரில் மற்றும் பாஜக முகவர் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை வாக்களிக்க கூடாது என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் ஆனால் சில நிமிடங்களில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த நபரை வெளியேற்றியதோடு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மாநகராட்சிகளில் மிகவும் குறைவாக சென்னையில்தான் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது/ படித்தவர்கள் மற்றும் பெரிய பணிகளில் வேலை பார்க்கும் சென்னை மக்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மட்டுமே அரசியல் பேசும் நபர்களாக இருந்து, வாக்களிக்க வெளியே வரவில்லை என்பது பெரும் சோகமாக காணப்படுகிறது. சென்னையிலுள்ள ஒரு 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் எந்தெந்த பகுதியில் எவ்வளவு வாக்கு சதவீதம் என்பதை தற்போது பார்ப்போம்.

Trending

Exit mobile version