தமிழ்நாடு

கிளம்பியது புயல்: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது என்பதும் தெரிந்ததே. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போதும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் திடீரென வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பஞ்சாப், ஒடிசா, சத்தீஸ்கர், ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால் வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version