தமிழ்நாடு

மீண்டும் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி: கனமழைக்கு வாய்ப்பு என தகவல்!

Published

on

வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த பகுதியில் தோன்றி உள்ளதை அடுத்து தமிழகத்தில் மீண்டும் 3 நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வரும் பத்தாம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதனை அடுத்து தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று ஆகியவற்றின் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது மூன்று நாட்கள் தொடர் மழைக்கு வாய்ப்பு என்றும், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மூன்று நாட்கள் கனமழையும் 5 நாட்களுக்கு வெகுகன மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும், தென் மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 10ஆம் தேதி முதல் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:

அக்டோபர் 10-ந் தேதி மழை பெய்யும் மாவட்டக்கள்: நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஈரோடு, வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள்.

அக்டோபர் 11-ந் தேதி மழை பெய்யும் மாவட்டக்கள்: வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள்

அக்டோபர் 12-ந் தேதி மழை பெய்யும் மாவட்டக்கள்: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகள்:

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version