இந்தியா

எஸ்.பி.ஐ தேர்வு: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு குறைந்த கட்-ஆஃப்!

Published

on

எஸ்பிஐ வங்கி தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு குறைந்த கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற எஸ்பிஐ கிளார்க் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதிப் பிரிவினருக்கு மற்ற பிரிவினரைக் காட்டிலும் குறைந்த கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டு இருந்ததற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மூன்றாவது ஆண்டாக மீண்டும் கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளார்க் எனப்படும் ஜூனியர் கிளார்க் எனப்படும் பதவிக்கு தேர்வுகளை நடத்தி அதற்கான கட்-ஆப் மதிப்பெண்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி எஸ்சி பிரிவினருக்கு 61.75 என்ற கட்-ஆப் மதிப்பெண்ணும் எஸ்டி பிரிவினருக்கு, எஸ்டி பிரிவினர்களுக்கு 57.25 என்ற கட் ஆப் மதிப்பெண்ணும், ஒபிசி பிரிவினருக்கு 61.75 என்ற கட் ஆப் மதிப்பெண்ணும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு 47.75 என்ற கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ வங்கிகள் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதிப் பிரிவினருக்கு குறைந்த கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version