சினிமா செய்திகள்

Low Budgetல் உருவான ‘அயன்’ திரைப்படம் – சூர்யாவின் கவனத்தைப் பெற்றது!

Published

on

நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் நேற்று. இதையொட்டி அவரது ரசிகர்கள், சூர்யாவுக்குப் பல்வேறு வகைகளில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அதில் ஒரு சில ரசிகர்கள் வேற லெவல் வாழ்த்துகளை தங்கள் ஆதர்ச நாயகனுக்கு அர்ப்பணித்தனர். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்று கூடி, சூர்யா நடிப்பில் வெளி வந்த ‘அயன்’ படத்தின் பாடல் காட்சிகளை லோ பட்ஜெட்டில் ரீ- மேக் செய்து உள்ளனர்.

அயன் படத்தில் வருவதைப் போலவே பாடலை மிகக் கச்சிதமாக எடிட் செய்து அதை சூர்யாவின் பார்வையில் படும்படி ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து உள்ளனர்.

இதை சூர்யாவும் பார்த்து, ‘லவ்ட் இட்’ என்று சொல்லி வீடியோவையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்து உள்ளார்.

சூர்யாவுக்கு நேற்று அவரின் தீவிர ரசிகர்கள் பலர், தங்களின் தனித் திறமையை வெளிப்படுத்தி பாடல்கள் பாடியும், படங்கள் வரைந்தும், இதைப் போன்று காணொலிகள் உருவாக்கியும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவரும் தன் மனம் கவர்ந்த படைப்புகளைத் தன் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தார்.

 

seithichurul

Trending

Exit mobile version