கிரிக்கெட்

சென்னை-பெங்களூர் போட்டியின்போது மைதானத்தில் மலர்ந்த காதல்: வைரல் வீடியோ

Published

on

சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் இந்த போட்டியின்போது மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் மலர்ந்த ஒரு காதல் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 11 ஆவது ஓவரில் திடீரென சிகப்பு டிசர்ட் அணிந்த பெண் ஒருவர் பெங்களூர் ரசிகருக்கு முழங்காலிட்டு அமர்ந்து தனது காதலை புரபோஸ் செய்தார்.

இதை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்த பெங்களூர் ரசிகர் அதன் பின் அந்த பெண்ணின் காதலை ஏற்றுக் கொண்டு கட்டிப்பிடித்தார். இதனையடுத்து அந்த பெண் தனது காதலருக்கு மோதிரம் மாட்டினார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

இந்த காதலை புரபோஸ் செய்யப்பட்ட அடுத்த நிமிடமே சென்னை அணியின் டெவோன் கான்வே ஒரு சிக்ஸார் அடித்து அந்த காதலர்களுக்கு வாழ்த்து கூறினார்.

https://twitter.com/addicric/status/1521894921547833345

seithichurul

Trending

Exit mobile version