கிரிக்கெட்

ஆஷஷ் தொடர் மைதானத்தில் காதலை புரமோஸ் செய்த நபர்: வைரல் வீடியோ!

Published

on

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டியின் இடையே ரசிகர் ஒருவர் திடீரென தனது காதலிக்கு மைதானத்திலேயே காதலை புரோபோஸ் செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பதும் இதனை அடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 425 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் தனது மேட்ச் பார்க்க வந்த தனது காதலியிடம் சென்று திடீரென தனது காதலை புரபோஸ் செய்தார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஒரு சில நொடிகள் மட்டுமே யோசித்து அதன் பின்னர் அவர் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்/ உடனே இருவரும் கட்டிப்பிடித்து கொண்டனர் என்பதும் காதலர் காதலிக்கு மோதிரம் அணிவித்து தனது காதலை உறுதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது காட்சிகள் நேரடி ஒளிபரப்பில் ஒளிபரப்பானதை அடுத்து உலகம் முழுவதும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆஷஸ் தொடரின் போது கடந்த 2017 ஆம் ஆண்டும் இதே போன்று ஒரு நபர் தனது காதலிக்கு காதலை புரபோஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version